செயின் பறிப்பு, பைக் திருட்டு வழக்கு ஆந்திரா வாலிபர் அதிரடி கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் செயின் பறிப்பு மற்றும் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட ஆந்திரா வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு பைக்குள், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்க சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின் பேரில், வடக்கு எஸ்.பி., வீரவல்லபன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கணேஷ் சப் இன்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் லட்சுமி நகர் - மகாத்மா காந்தி சந்திப்பில், கோரிமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பியோடினார்.அவரை போலீசார் மடக்கி பிடித்து போது, நிலைதடுமாறி கீழே விழுந்தில், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தனர். பின், விசாரணையில் அவர், ஆந்திராவை சேர்ந்த சந்தோஷ்குமார் (எ) பாபு, 36; என தெரியவந்தது.மேலும், அவரது நண்பர் சையது பாஷாவுடன் சேர்ந்து, புதுச்சேரி ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறித்ததும், எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் பைக்குள் திருடியும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து, 1.5 லட்சம் மதிப்புள்ள இரண்டு பைக்குள், ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.கர்நாடகா, ஆந்திரா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் 40க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சந்தோஷின் கூட்டாளி சையது பாஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.