உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் 

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் 

புதுச்சேரி, : சின்ன சுப்புராயபிள்ளை வீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, வரும் 27 ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. புதுச்சேரி, சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்றிரவு அங்காளபரமேஸ்வரி அம்மன், மீனாட்சி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, வரும் 27 ம் தேதி இரவு 8:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி