மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
23-Sep-2025
புதுச்சேரி: மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் 618 அங்கன்வாடி ஊழியர், உதவியர் பணியிட அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காலியாக உள்ள 344 அங்கன்வாடி ஊழியர் மற்றும் 274 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குட்ட பிளஸ் 2 முடித்த பெண்கள் www.wcd.puducherry.gov.inமற்றும் www.py.gov.inஎன்ற இணையதளங்களில் கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். மதிப்பூதியமாக 6 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், விண்ணப்ப படிவம் பெற இணையதளம் வழியே நுழைய முடியாததால், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையிடம் முறையிட்டனர். அதனையொட்டி, காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை இயக்குநர் முத்து மீனா விடுத்துள்ள அறிவிப்பு: அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வலைதளத்தை அணுக முடியவில்லை. அதனால், முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்த பின், விண்ணப்பங்களை வரவேற்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
23-Sep-2025