மேலும் செய்திகள்
சிவபெருமானுக்கு அன்னாபிேஷக வழிபாடு
16-Nov-2024
புதுச்சேரி: காராமணிக்குப்பம் சக்திவேல் பரமானந்தர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது. முதலியார்பேட்டை, காராமணிக்குப்பம் சக்திவேல் பரமானந்தர், சித்தர் பீடம் உள்ளது. அன்னாபிேஷகத்தையொட்டி, நேற்று சித்தர் பீடத்திற்கு இளநீர், நெய் உள்ளிட்ட அபிேஷகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகிகள், கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
16-Nov-2024