அரசு பள்ளியில் ஆண்டு விழா
அரியாங்குப்பம்: அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், சபாநாயகர் செல்வம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தவளக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.