உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கருத்து கணிப்புகளுக்கான தடை நேரம் அறிவிப்பு 

கருத்து கணிப்புகளுக்கான தடை நேரம் அறிவிப்பு 

 புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் கருத்து கணிப்பிற்கான முந்தைய மற்றும் பிந்தைய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.    மாவட்ட தேர்தல் அதிகாரி  குலோத்துங்கன் செய்திக் குறிப்பு: ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளான வரும், அக்., 6 ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதும், அதன் முடிவுகளை வெளியிடுவதும் அல்லது விளம்பரப்படுத்துவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.  இதேபோல் ஓட்டுப்பதிவு நிறைவடையும் நேரத்திற்கு முந்தைய, 48 மணி நேர காலப்பகுதியில், கருத்துக்கணிப்பு முடிவுகள் அல்லது தேர்தல் தொடர்பான எந்தவொரு செய்தியையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை