உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக மேலும் ஒரு எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக மேலும் ஒரு எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, மேலும் ஒரு எம்.எல்.ஏ., மனு கொடுத்துள்ளார்.புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அங்காளன், சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர்.நேற்று உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., (பா.ஜ., ஆதரவு சுயேச்சை) சிவசங்கர், சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, சட்டசபை செயலர் தயாளனிடம், தனது உதவியாளர் மூலம் மனு அளித்தார்.மனு விபரம்:சட்டசபையில், சபாநாயகரின் செயல்பாடு பாரபட்சமின்றி இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சபாநாயகர், சட்டசபையின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். அமைச்சரவையின் பங்கை மீறி, நிழல் முதல்வராக செயல்படுகிறார். அவரது போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. எந்தவொரு முக்கியமான அழைப்பிலும் தனது படத்தை திணிக்க அதிகாரிகளை வலியுறுத்துகிறார். எனவே, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின்படி கொண்டுவர வேண்டுகிறேன்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆட்சிக்கு எதிர்ப்பு இல்லைஇதுகுறித்து சிவசங்கர் எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது, 'நான் அரசுக்கும், ஆட்சிக்கும் எதிரவானவன் அல்ல. சபாநாயகரின் மரபு மீறிய செயல் காரணமாகவே, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி மனு அளித்துள்ளேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை