உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., பிரமுகர் கொலையில் மேலும் ஒருவர் கைது

பா.ஜ., பிரமுகர் கொலையில் மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம் இவரது மகன் உமாசங்கர், 38. பா.ஜ., பிரமுகரான இவரை கடந்த மாதம் 26ம் தேதி இரவு கருவடிக்குப்பத்தில் 5 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரிமாரியாக வெட்டி கொலை செய்தது.இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ரவுடி கருணா உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கடந்த 26ம் தேதி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் முக்கிய குற்றவாளி கருணா அளித்த வாக்குமூலம் அடிப்படையில், லாஸ்பேட்டை சாமிபிள்ளைத்தோட்டம் தமிழ் ஒளி தெருவைச் சேர்ந்த கணபதி மகன் ஹரி (எ) ஹரிஹரன், 25, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி