மேலும் செய்திகள்
நாட்டுநலப்பணி திட்ட முகாம்; மாணவர்கள் களப்பணி
01-Oct-2024
புதுச்சேரி,: வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேதியியல் விரிவுரையாளர் முரளி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பங்கேற்று, 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு. மாணவர்கள் நேர்மையான வழியில் நடப்பது அவசியம்' என்றார். உதவி சப் இன்ஸ்பெக்டர் சரண்யா லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடத்தில் கலந்துரையாடினார். நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர் விக்னேஷ் விஜிலென்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். விரிவுரையாளர் இறைவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விரிவுரையாளர்கள் விநாயகம், வெங்கடாஜலபதி, ராஜேஷ், வித்யா, ஆண்டாள், தேவி பாலா, அருள்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். நலப்பணித்திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.
01-Oct-2024