மேலும் செய்திகள்
லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி
29-Oct-2024
புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினையொட்டி ஜிப்மரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.ஜிப்மர் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.28 ம் தேதி முதல் நவ.3ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகின்றது.முதல் நாளான நேற்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தலைமையில் அனைத்து ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதேபோன்று, மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமையில் மருத்துவமனையிலும், ஜிப்மர் முதல்வர் ரவிக்குமார் சிட்டோரியா தலைமையில் கல்வி மையத்திலும் உறுதிமொழி ஏற்பு நடந்தது.இதில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் உறுதிமொழியை ஏற்றனர். லஞ்ச ஒழிப்பு வாரத்தினையொட்டி ஜிப்மர் வளாகம் முழுவதும் விழிப் புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
29-Oct-2024