உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் 

போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் 

திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் மணலிப்பட்டில் நடந்தது.கூட்டத்திற்கு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தனர்.இதில், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பேசுகையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், குற்றச் சம்பங்களை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் குறித்தும், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில், போலீசார் மற்றும் மணலிப்பட்டு இளைஞர்கள், மகளிர்கள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி