மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
புதுச்சேரி : தீண்டாமை ஒழிப்பு முன்னணி வில்லியனூர் கொம்யூன் குழு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சுரேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரவணன் துவக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் இறை உரையாற்றினார். துணைத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதுச்சேரி அரசு கடந்த பட்ஜெட் தொடரில் அறிவித்தபடி, ஆதிதிராவிட நலத்துறை கிளை அலுவலகத்தை வில்லியனுாரில் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, புதிய நிர்வாக குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக நடராஜன், செயலாளராக செங்குலத்தான், பொருளாளராக மகாலட்சுமி, துணைத் தலைவர்களாக மாரிமுத்து, ரஜினிகாந்த், தியாகராஜன், இணை செயலாளர்களாக சுரேந்திரன், இன்னரசு, தேவி பிரியா தேர்வு செய்யப்பட்டனர்.
16-Sep-2025