உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை, இதய சிகிச்சை நிபுணர்கள்

 அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை, இதய சிகிச்சை நிபுணர்கள்

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் வரும் 6ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளனர். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி 100 அடி சாலை, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் இயங்கி வருகிறது. இங்கு, சென்னை அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடலியல் சிறப்பு நிபுணர் விஷ்ணு அபிஷேக்ராஜூ வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். அமில ரிப்ளக்ஸ் கோளாறுகள், நாள்பட்ட வயிற்றுப்போக்கு, செரிமான பாதை ரத்தப்போக்கு, மஞ்சள் காமாலை, அழற்சி குடல் நோய், கணைய அழற்சி, பித்தப்பை கல் கோளாறுகள், இரைப்பை குடல் புற்று நோய் போன்றவற்றுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். இதேபோல், இதய அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் நரசிம்மன் உயர் ரத்த அழுத்தம், உடல் கொழுப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு, மாரடைப்பு, ரத்த குழாய் பிரச்னைகள், இதய வால்வு பிரச்னைகள் மற்றும் அனைத்து இதயம் சார்ந்த பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்க உள்ளார். வரும் 6ம் தேதி மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை