உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அப்போலோ குழந்தை மருத்துவர் 2ம் தேதி புதுச்சேரி வருகை

 அப்போலோ குழந்தை மருத்துவர் 2ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 2ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மஹால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சிறப்பு நிபுணர் முத்துக்குமரன், வரும் 2ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளுல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்ற குழந்தைகளின் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். பிரதி மாதம் முதல் சனிக்கிழமை மருத்துவர் வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !