தேனீ வளர்க்க மானியத்துடன் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: வேளாண் தோட்டக்கலை பிரிவு மூலம் தேனீ வளர்ப்பிற்கான மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து இணை வேளாண் இயக்குனர்(தோட்டக்கலை) அலுவலக செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு வேளாண் துறை தோட்டக்கலை இயக்கம் மூலமாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், வேளாண் சார்ந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 2024-25ம் ஆண்டிற்கான தேனீ வளர்ப்பு, பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டி ஆகிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுடன் மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில், கடந்த ஆண்டு தேனீ வளர்ப்பிற்காக விண்ணப்பித்தவர்கள், இந்த ஆண்டு மறுபடியும் விண்ணப்பிக்க அவசியம் இல்லை. விண்ணப்பங்களை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர்(தோட்டக்கலை) அலுவலகம் மூலமாகவோ, வேளாண் துறையின் இணையதளம் (https://agri.py.gov.in) மூலமாகவோ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும், விபரங்களுக்கு 94886 23763 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.