புதுச்சேரி: புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில், நடக்கும் பழந்தமிழர் பயன்பாட்டுப் பொருள்கள், தாவரங்கள், ஓவியம், சிற்பம் மற்றும் புத்தகக் கண்காட்சியில், பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. படைப்பாளர் இயக்க நிறுவனர் ஆறு செல்வன் அறிக்கை; புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கத்தின், 17ம் ஆண்டு தொடக்க விழா, வரும் ஜனவரி 25ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, பழந்தமிழர் பயன்பாட்டுப் பொருட்கள் கண்காட்சி, தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள், ஓவியம் மற்றும் புத்தகக் கண்காட்சி என, பலவகை கண்காட்சியை நடத்த இருக்கிறது. இதில், பங்கேற்க விரும்புவோர், விண்ணப்பங்களை, புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம், எண் 4, காமராசர் தெரு, வி.பி. சிங் நகர், சண்முகாபுரம், புதுச்சேரி என்ற முகவரியிலும், gmail.comஎன்ற இ.மெயில் மூலமாகவும் அல்லது நேரிலோ பெற்றுக்கொள்ளலாம். கண்காட்சியில், பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. பழந்தமிழர் பயன்பாட்டுப் பொருள்கள் கண்காட்சியில் தமிழர் மரபுவழிப் பயன்படுத்திய வீட்டுப் பொருள்கள், துணி வகைகள், உழவுப் பொருள்கள் மற்றும் கருவிகள், வீரம் சார்ந்த பொருள்கள், இசைக்கருவிகள், கூத்துப் பொருள்கள் போன்ற பொருள்களைக் காட்சிப் படுத்தலாம். ஓவியங்கள், புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறப் புதுச்சேரி எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணபங்கள் வரும் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 7904235300, 9894755985 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.