உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் வீரவெங்கடேஷ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தல் 2025-26ம் கல்வியாண்டிற்கான ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tncu.tn.gov.inஎன்ற இணையவழியில் பெறப்பட்டு வருகின்றனர். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 20ம் தேதி 5:00 மணி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த பட்டயப் பயிற்சி வகுப்பானது, இரண்டு பருவங்களை கொண்டது.இந்த வகுப்பில் சேருவதற்கு வயது வரம்பு, 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய். பயிற்சி கட்டணம் 20,750 ரூபாய். பதிவேற்றம் செய்த கட்டண ரசீது நகல் மற்றும் விண்ணப்பித்தினை டவுண்லோடு செய்து, அதில் சுயஒப்பமிட்டு தேவையான சான்றிதழ்களை இணைத்து, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், 62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் நேரில் அல்லது பதிவு அஞ்சல், கூரியரில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0413-2331408, 2220105 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !