பெண்களுக்கு தையல் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இங்கி வருகிறது. இங்கு, இலவசமாக தையல் பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 18 முதல் 45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு மாதம் பயிற்சி முடிந்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 20ம் தேதி துவங்குகிறது. இதுபற்றி மேலும், விபரங்களுக்கு 8870497520, 0413 2246500 ஆகிய எண்ணிகளில் தொடர்பு கொள்ளவும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.