உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பல்கலை., தொலைதுார படிப்புகளுக்கு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதுார படிப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்குநர் அர்விந்த் குப்தா செய்திக்குறிப்பு:புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி இயக்குநகரத்தால் மொத்தம் 20 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில் 8 எம்.பி.ஏ., மேலாண்மை பட்டப்படிப்புகள் உள்ளன.அவற்றில் சந்தைப்படுத்தல், நிதி, மனித வள மேலாண்மை, சர்வதேச வணிகம், பொது, சுற்றுலா, செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் மருத்துவமனை மேலாண்மை அடங்கும். மேலும், எம்.ஏ., - ஆங்கிலம், ஹிந்தி, சமூகவியல் மற்றும் எம்.காம்., என, நான்கு முதுநிலை படிப்புகள் உள்ளன. இது தவிர பி.பி.ஏ., பி.காம்., பி.ஏ., உள்ளிட்ட 8 இளநிலை படிப்புகளும் உள்ளன. இவற்றில் ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பத்திரிகை வெகுஜன தொடர்பு ஆகியவை அடங்கும்.இந்த பட்டப்படிப்புகள் டில்லி ஏ.ஐ.சி.டி.சி., தொலைதுாரக் கல்விப் பணியகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31ம் தேதிக்குள் https://dde.pondiuni.edu.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் விளக்கங்களுக்கு, உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணிலும் அல்லது pondiuni.ac.inஎன்ற இ-மெயில் மூலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை