மேலும் செய்திகள்
பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை
30-Oct-2026
புதுச்சேரி: மின் துறையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 42 ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளையும் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி மின்சாரத் துறையில் நேரடி நியமனம் மூலம் காத்திருப்பு பட்டியலில் இருந்த 19 நபர்கள் கட்டுமான உதவியாளர்களாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபை வளாகத்தில் இன்று (நவ.,6) நடந்தது. மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அத்துடன், மின்துறையில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் 42 உதவியாளர்களுக்கு ஒயர்மேன் பதவி உயர்விற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். மின்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மின்துறை சிறப்பு அதிகாரி கமலாகுமாரி, உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
30-Oct-2026