உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

புதுச்சேரி : ஜனாதிபதியால் பாராட்டப்பட்ட அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சனி, கடந்தாண்டு நடந்த சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த ரக்ஷா பந்தன் விழாவில், மாணவி ரஞ்சனியை, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டினார். அதனை தொடர்ந்து, பள்ளி சார்பில், நடந்த ஆசிரியர் தினவிழாவில், மாணவி ரஞ்சனிக்கு ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பள்ளிக்கல்வி துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், தலைமை ஆசிரியர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ