உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலேசிய தமிழர்களுக்கு பாராட்டு விழா

மலேசிய தமிழர்களுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி: மலேசியாவில் இருந்து புதுச்சேரி வந்த மலேசிய தமிழர்கள் முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன், கவிஞர் நாராயணன், பேராசிரியர் கந்தசாமி, கிருட்டின வாணி நாராயணன் ஆகியோருக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.சங்க செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கி, மலேசிய தமிழர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.சங்க பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் முன்னிலை வகித்தனர். புலவர் ஆதிகேசவன், பேராசிரியர் முனைவர் இளங்கோவன் வாழ்த்தி பேசினர்.அருள் ஆறுமுகம் கண்ணன், 'மலேசியாவில் தமிழரும் தமிழும்' என்ற தலைப்பில் பேசினார். புதுவை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராசா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி