மேலும் செய்திகள்
வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
17-Sep-2024
புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நிறைவாக, பெருமாள் குதிரை வாகனத்தில் தசமி அம்பு போடுதல் வைபவம் நடந்தது.புதுச்சேரி, காந்தி வீதியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நவராத்திரி உற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் இரவு 7:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு நடக்கிறது.நவராத்திரி நிறைவாக, நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் உள் புறப்பாடாகி, 'தசமி அம்பு போடுதல் வைபவம்' நடந்தது. நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமை என்பதால், அதிக அளவில் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
17-Sep-2024