உள்ளூர் செய்திகள்

கலை இலக்கிய விழா

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கலை, இலக்கிய விழா பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடந்தது. அறக்கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். செயலர் வள்ளி, நமச்சிவாயம், ராஜாராம், ஜெகசண்முகம், சுசீலா, விசாலாட்சி, பாரதி முன்னிலை வகித்தனர். காந்தி பிறந்த நாளையொட்டி ‘காந்தியண்ணல் ஆணை’ தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 52 கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர். கவியரங்கை ரமேஷ் பைரவி, பாவலர்கள் ஏகாம்பரம், மதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில், அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு கவிஞர்களுக்குப் பாராட்டிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக பாவலர் புவனேஸ்வரி வரவேற்றார். பாவலர் வேல்விழி சிவக்கொழுந்து தொகுத்து வழங்கினார். பாவலர் காசிமுனியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை