உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்டேரிக்குப்பத்தில் கலை விழா நிறைவு

காட்டேரிக்குப்பத்தில் கலை விழா நிறைவு

திருக்கனுார்: அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த கலை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் திடலில் அரசு கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 3 நாள் 'புதுச்சேரி கலை விழா' கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மேற்கு வங்காளம், பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கலை விழா நிறைவாக கலைமாமணி ராஜாராம் குழுவினரின் மெல்லிசை, ஜம்மு காஷ்மீர் ரூஃப் நடனம், ஆந்திரப் பிரதேசம் கரகலு, வீரநாட்டியம், புதிய பல்லவி திரை இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத் துறை இளநிலை நுாலக உதவியாளர்கள் முருகானந்தம், தியாகராஜன், பல்நோக்கு உதவியாளர்கள் அன்னக்கிளி, அண்ணாமலை, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ