உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆர்ட்லேண்ட் குழந்தைகள் கலை மையம் ஆண்டு விழா

ஆர்ட்லேண்ட் குழந்தைகள் கலை மையம் ஆண்டு விழா

புதுச்சேரி: ஆர்ட்லேண்ட் குழந்தைகள் கலைமையத்தின் 30ம் ஆண்டு விழா ஜவகர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.கலைமாமணி ஓவியர் சரவணகுமார் வரவேற்றார். தலைமை விருந்தினராக அரிமா விஜயகுமார் கலந்துகொண்டு பேசினார். முதன்மை விருந்தினராக கலைப் பண்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குனர் கலியபெருமாள் பங்கேற்று, சாதனை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி நிர்வாக இயக்குநர் சுந்தர் ராஜன், நீர் வண்ண ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதி ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.விழாவில் சாதனை கலைஞர்கள் ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதி, சிற்பி ராதாகிருஷ்ணன், ஓவியர்கள் சக்திதாசன், ரூபன், நடன ஆசிரியர் சுந்தரமூர்த்தி, ஓவிய ஆசிரியர்கள் தேவ குழந்தை ராஜ், ஆனந்த சரவணன் ஆகியோருக்கு ஆர்ட்லேண்ட் விருதுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை ஆர்ட்லேண்ட் கலை மையத்தின் இயக்குனர் ஆதிரை சரவணகுமார், லட்சியா, சிவராமன், ராஜ்பிரியா, சினேகா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை