அருணை மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அருணை மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியளவில் மாணவி ரோஷினி 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சாதானா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், தீபலட்சுமி 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளை பள்ளி முதல்வர் சந்தானம், பள்ளி மேலாளர் தமிழ், துணை முதல்வர் கலைவேந்தன் ஆகியோர் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.பள்ளி முதல்வர் கூறுகையில் எமது பள்ளி நகரப்பகுதியாக இனையாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு எங்கள் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் கட்டணம் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். இந்த மாபெரும் வெற்றிக்கு அயராது பாடுப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.