மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா
14-Jan-2025
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வர் கோவிலில், ஆருத்ரா உற்சவம் நடந்தது. காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10:10 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதனை தொடர்ந்து, நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பிரம்ம தீர்த்த கரையில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது.கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் சிங்கரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
14-Jan-2025