உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆஷா ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஆஷா ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம், முல்லை நகரில் நடந்தது.துணை தலைவர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சுதா, பொருளாளர் வள்ளி முன்னிலை வகித்தனர். சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர் ஜவஹர், துணை பொதுச்செயலாளர் மணிவாணன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆஷா ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி முதல்வர் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டும் வழங்க நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிர்வாகி வெற்றிச்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !