வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
திருபுவனை : சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று நடந்தது. திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் 17ம் நுாற்றாண்டில் பராந்தக சோழர் காலத்தில் கட்டப்பட்ட சப்த மாதா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.27ம் தேதி குங்குமத்தால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்திலும், நேற்று முன்தினம் சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி கால பூஜையில் வாராகி அம்மன் தேங்காய் பூவினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 26ம் தேதி தொடங்கிய இந்த ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது.