மணக்குள விநாயகர் கல்லுாரியில் அசோக சக்கரா சாதனை நிகழ்ச்சி
புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் 76ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு 'அசோக சக்கரா' உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், கல்விக் குழுமத்தின் உறுப்பினர்கள் வைஷ்ணவி ராஜராஜன் மற்றும் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் துவங்கி வைத்தனர்.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 4,500 பேர் மனித அசோக சக்கரத்தை உருவாக்கி உலக சாதனை படைத்தனர். அதனை, அமெரிக்கா உலக சாதனை குழுமத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் பார்வையிட்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்தார். தொடர்ந்து, அசோகா சக்கரா உலக சாதனை சான்றிதழ், அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் சார்பாக வழங்க பட்டது.அகாடமிக் டீன் அன்புமலர், முனைவர் அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை டீன் கைலாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.