மேலும் செய்திகள்
அன்னதானம்
18-Jan-2026
3ம் ஆண்டு துவக்கம் த.வெ.க. அன்னதானம்
02-Feb-2026
புதுச்சேரி: அன்னதானம் வழங்கிய தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38. இவர், ஜவகர் நகர் முதல் தெருவில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனம் சார்பாக ஜவகர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் தினமும் அன்னதானம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் நிறுவனத்தில் வேலை செய்த வேல்முருகன் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தபோது, அவருடன், பாவாணர் நகரை சேர்ந்த ஆறுமுகம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை யடுத்து, ஆறுமுகத்தின் உறவினர்கள் சிலர் சதீஷ்குமாரின் நிறுவனத்திற்கு வந்து அங்கிருந்த அமலன், 26, என்பவரை தாக்கினர். சதீஷ்குமார் மற்றும் ஆறுமு கமும் தனித்தனியே அளித்த புகார்களின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Jan-2026
02-Feb-2026