உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

நெட்டப்பாக்கம்,: ஏரிப்பாக்கம் புதுக்காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 32, கடந்த 11ம் தேதி இரவு, ராஜேஸ்வரி, அண்ணன் சங்கர், தாய் பாப்பாத்தி, உறவினர்கள் மஞ்சுளா, திரிஷா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, கிருஷ்ணராஜ், சுந்தரி, ஆறுமுகம், தாட்சாயணி ஆகியோர் முன் விரோதத்தில் ராஜேஸ்வரி வீட்டினுள் நுழைந்து ஆபாசமாக பேசி, தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் சங்கர் பலத்த காயமடைந்தார். புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை