உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எலக்ட்ரீஷியன் மீது தாக்குதல்: 3 பேர் கைது

எலக்ட்ரீஷியன் மீது தாக்குதல்: 3 பேர் கைது

புதுச்சேரி : புதுச்சேரி, பெத்துசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48; இவரது மகன் நரேந்திரன், 23; எலக்ட்ரீஷியன். இவருக்கும், சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் நரேந்திரன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சாமிப்பிள்ளைதோட்டத்தை சேர்ந்த பாலாஜி, அருண், லெனின் நகரை சேர்ந்த வினோத் ஆகியோர் நரேந்திரனை திட்டி, இரும்பு பைப் மற்றும் உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர். அதில், படுகாயமடைந்து மயங்கி விழுந்த நரேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் பாலாஜி, 25; அருண், 26; வினோத், 24; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ