உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மெக்கானிக் மீது தாக்குதல்

மெக்கானிக் மீது தாக்குதல்

புதுச்சேரி : புதுச்சேரி பூமியான்பேட் விக்டோரியா நகரை சேர்ந்தவர் நாகராஜன், 40. மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 1ம் தேதி மாலை வந்த ஆதி 25, அவரது பைக்கை வாட்டர் சர்விஸ் செய்ய கொடுத்துள்ளார். அப்போது அவர், கடை ஊழியர் ஹரியை, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை நாகராஜன் தட்டிகேட்டுள்ளார். அதற்கு ஆதி, நாகராஜனை திட்டி, தாக்கினார். தொடர்ந்து ஆதி போன் மூலம் அவரது நண்பரான விஜயபாரதி 25, என்பவரை அழைத்தார். பின் இருவரும் சேர்ந்து நாகராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். நாகராஜன் புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தாக்கியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி