தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
புதுச்சேரி: கடலுார் மாவட்டம், சாக்காங்குடியைச் சேர்ந்தவர் துளசிதேவன், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர் 17 ம் தேதி ஏம்பலம் புதுநகரைச் சேர்ந்த சிவச்சந்திரன் வீட்டிற்கு கடன் தொகை வசூலிக்க சென்றார்.அவர் வீட்டில் இல்லாததால் அவரது மாமானர் வீடான புதுக்குப்பத்திற்கு சென்று, சிவச்சந்திரனிடம் கடன் தொகையை கேட்டார்.இதற்கு சிவச்சந்திரன் மாலை வர கூறினார். மாலை சென்ற துளசிதேவனை, ஏம்பலம் ஏரிக்கரை பகுதியில் சிவச்சந்திரன் திட்டி, தாக்கினார். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.