தனியார் மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்
காரைக்கால் : காரைக்கால் தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியரை ஆபாசமாக பேசிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் சேத்திலால் நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு மேலாளராக வேடியப்பன் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது நிரவி ஓடுதுறை பகுதியை சேர்ந்த கதிரவன், ராஜேஷ்குமார், ஜான் பெர்னான்ஸ், விக்கி, சுந்தர் ஆகியோர் திடீரென மருத்துவமனைக்குள் ஆத்து மீறி உள்ளே நுழைந்துபணியில் இருந்த பெண்ணை ஆபாசமாக பேசியுள்ளனர். இதை தடுத்த சக ஊழியர் புனித ராஜை தாக்கினர். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.