உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பி பிட்டர் மீது தாக்குதல்

கம்பி பிட்டர் மீது தாக்குதல்

பாகூர் ; பாகூர் அடுத்த மேல்பரிக்கல்பட்டு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி 40;கம்பி பிட்டர். இவர், கடந்த 15ம் தேதி இரவு பாகூரில் டியூஷனில் இருந்து தனது மகள் மற்றும் அவரது தோழியை பைக்கில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.பரிக்கல்பட்டுஅருகே அதே பகுதியை சேர்ந்த சரபாலன் என்பவர் குடிபோதையில், தாறுமாராக பைக்கை ஓட்டி சென்றார்.அதை சத்தியமூர்த்தி தட்டிக்கேட்டதால், அவரது பைக்கை சரபாலன், எட்டி உதைத்து கீழே தள்ளினார். அவரை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். பாகூர் போலீசார் வழக்குப் பதிந்துசரபாலனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை