கடனை திருப்பி கேட்ட பெண்கள் மீது தாக்குதல்
புதுச்சேரி: முதலியார்பேட்டை, டி.எம். நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ். தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளார். உப்பளம் நேதாஜி நகர் கஸ்துாரிபாய் காந்தி வீதியில் வசிக்கும் ஜெயபாரதி என்பவருக்கு ரூ. 1.5 லட்சம் பணம் கடனாக கொடுத்ததாகவும், அதை வசூல் செய்ய அவரது மனைவி மஞ்சுளாவிடம் தெரிவித்துள்ளார்.மஞ்சுளா தனது சகோதரி மாலதி, உறவினர் சிவசக்தி ஆகியோருடன் நேதாஜி நகரில் உள்ள ஜெயபாரதியிடம் தாய் கலா மார்க்கிடம் பணம் கேட்டனர். கோபமடைந்த கலா மார்க், விஜயா, ஓபித், நிக்கோசன் ஆகியோர் சேர்ந்து மூவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.இது தொடர்பாக மஞ்சுளா ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கலாமார்க், விஜயா, ஓபித், நிக்கோசன் ஆகியோர் மீது அடிதடி, மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.