நிரந்தரப்பணி வழங்க கோரி கடலில் இறங்கி போராட முயற்சி
புதுச்சேரி, : பொதுப்பணித்துறையில் நிரந்தர பணி வழங்க கோரி, கடலில் இறங்கி போராட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுப்பணித்துறையில் வாரிசு தாரர்கள் 192 பேருக்கு நிரந்த பணிக்கு பதிலாக, வவுச்சர் ஊழியர்களாக 18 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிரந்தர பணி கிடையாது என, அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து, நிரந்தர பணி வழங்க கோரி, வாரிசு தாரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு, பொதுப்பணித் துறை வாரிசு தாரர்கள் சங்க தலைவர் ஜெயசந்திரன் தலைமையில், துணை தலைவர் சந்தியபிரகாஷ் முன்னிலை நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கடலில் இறங்கி போராட்டம் நடத்த சென்றனர்.தகவலறிந்த, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பெரியக்கடை போலீசார் கடலில் இறங்க முன்றவர்களை தடுத்தி நிறுத்தி, அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.