உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.29 கோடி கையாடல் தணிக்கை அறிக்கையில் பகீர் 

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.29 கோடி கையாடல் தணிக்கை அறிக்கையில் பகீர் 

புதுச்சேரி,:புதுச்சேரியில், அரசு துறைகளில் 29 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், மின்துறையில் மட்டும், 27 கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளதாகவும் மத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசின், 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட் மீதான மத்திய தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின், மக்களின் பார்வைக்காக, கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. மானிய நிதி ஒதுக்கீடு இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி கூறியதாவது: புதுச்சேரியில், 2019 - 20ல் நிலுவை கடன் 9,449 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2023 - 24ல், 13 ஆயிரத்து 84 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதேபோல, 2023 - 24 பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீடு 12,613.26 கோடி ரூபாய். இதில், 11,494.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 1,119.91 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. கடந்த 2023 - 24 காலகட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மானிய நிதி ஒதுக்கீட்டில், துணை நிலை மானிய ஒதுக்கீடான 973.93 கோடியில், 613.34 கோடி மிகையானது. நிரூபணமானது மேலும், 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மானியங்களில், முதல் நிலை மானிய ஒதுக்கீட்டிலேயே 22.33 கோடி சேமிப்பு இருந்தது. இதனால், துணை நிலை ஒதுக்கீடு முழுதுமாக தேவையற்றது என நிரூபணமானது. கடந்த, 2024 மார்ச் வரை, புதுச்சேரி அரசில் முறைகேடு, பணம் இழப்பு மற்றும் பணம் கையாடல் செய்ததாக, 316 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், அரசின் அனைத்து துறைகளையும் சேர்த்து மொத்தம் 28.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி மின்வாரியத்தில் மட்டும், 257 முறைகேடு மற்றும் கையாடல் சம்பவங்கள் நடந்து, மின்துறையில் மட்டும் 27.14 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தணிக்கை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை பொதுக்கணக்கு குழு கூடி விவாதித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ