மேலும் செய்திகள்
புளு ஸ்டார் பள்ளி விளையாட்டு போட்டி பரிசளிப்பு
29-Aug-2024
புதுச்சேரி, : முருங்கப்பாக்கம் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.புதுச்சேரி தேசிய புள்ளியியல் மாதிரி ஆய்வு அலுவலகம் சார்பில், 'ஸ்வச்சதா ஹை சேவா 2024' கடந்த 14ம் தேதி துவங்கி வரும் 1ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 18ம் தேதி, வேல்ராம் பட்டு ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.நேற்று முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அன்றாட கழிவுப் பொருள்களைக் கொண்டு மறு பயன்பாட்டு பொருள்களாக மாற்றும் போட்டி நடத்தப்பட்டது.புதுச்சேரி துணை வட்டார புள்ளியியல் அலுவலகம், முதுநிலை புள்ளியியல் அதிகாரி கோபிநாத் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், கடலுார் துணை வட்டார புள்ளியியல் தலைமை அதிகாரி சுரேஷ் குமார், புதுச்சேரி துணை வட்டார புள்ளியியல் அலுவலக முதுநிலை புள்ளியில் அலுவலர்கள் பாண்டியராஜ், துபாய் தத்தா, இந்தரஜித் குமார், ராஜ்கிஷோர் முக்யா, கடலுார் மற்றும் புதுச்சேரி களப்பணி மேற்பார்வையாளர்கள், பள்ளி துணை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
29-Aug-2024