புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியருக்கு விருது
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைகள் துறை உதவி பேராசிரியர் பவித்ரா, தேசிய நாடக விருது பெற்றார். விசாகபட்டினத்தில், இந்திய அரசின் கலாசார அமைச்சகம், ஆந்திரப்பிரதேச மொழி மற்றும் கலாசாரத்துறை, ஆந்திரா பல்கலைக்கழகம் இணைந்து 2025ம் ஆண்டிற்கான விசிஷ்ட ரங்க சேவா புரஸ்கார் என்கிற தேசிய விருதை உதவி பேராசிரியர் பவித்ராவிற்கு வழங்கியது. இவ்விருது, நாடகத்துறையில் கலைஞர் மற்றும் கல்வியாளராக அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, வாழ்த்து தெரிவித்தார்.