சமூக சேவகருக்கு விருது
அரியாங்குப்பம்: சமூக சேவகருக்கு, சிறந்த சமூக பொறுப்பாளர் விருது வழங்கப்பட்டது. எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சார்பில், 21ம் ஆண்டு, விழா திருச்சி எம்.ஐ.இ.டி., பொறியியல் கல்லுாரில் நடந்தது. நிகழ்ச்சியில், சிறந்த சமூக சேவையை அங்கீகரிக்கும் வகையில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் தனசுந்தரம் சாரிடபிள் சொசைட்டி நிறுவன தலைவர் ஆனந்தனுக்கு, சிறப்பு சமூக பொறுப்பாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.