மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
16-Oct-2025
புதுச்சேரி: டில்லியில் நடந்த தேசிய போலீஸ் குழு விழாவில் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ராஜூ பீட்டருக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டது. டில்லியில் தேசிய போலீஸ் குழுவின் 10வது ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 500 அதிகாரிகள் உட்பட 700 மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். இதில், புதுச்சேரி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக வடக்கு எஸ்.பி., அலுவலக கிரைம் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜூ பீட்டருக்கு, காவல்துறையின் சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டது.இதையடுத்து, விருது பெற்ற சப் இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
16-Oct-2025