உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறந்த பள்ளி முதல்வர்களுக்கு விருது

 சிறந்த பள்ளி முதல்வர்களுக்கு விருது

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி முதல்வர்களுக்கு விருது வழங்கி பாராட்டினர். அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் சார்பில் நடந்த சிறப்பாக பணியாற்றிய பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் விருது வழங்கும் விழா கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரதீப்தேவநேயன் தலைமை தாங்கினார். துறை முதல்வர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். டிபார்ட்மெண்ட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி துறை செயலர் சுமிதா ஐ.ஏ.எஸ்., பங்கேற்று பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 66 பேருக்கு 'வாய்ஸ் ஆப் உமன்' விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமிபிரியா, அன்புக்கரசி ஆகியோர் செய்தனர். பேராசிரியர் சசிகலா நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை