மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை பொருளாளர் ராஜராஜனுக்கு விருது
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கல்வி குழும பொருளாளர் ராஜராஜனுக்கு, ஐ.சி.டி., அகாடமி 'ஜென் எக்ஸ் இளம் தொழில் முனைவோர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.ஐ.சி.டி., அகாடமியின் 63வது பதிப்பு சார்பில் 'பிரிட்ஜ்- 25' கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. ஐ.சி.டி., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர்.விழாவில், மணக்குள விநாயகர் கல்வி குழும நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கிளவுட் அடிப்படையிலான நிறுவன வள திட்டமிடல், மென்பொருள் வழங்கும் நிறுவனம் மற்றும் இந்த்பஜார் எனும் வளர்ந்து வரும் ஆன்லைன் ரீடெய்ல் வணிக நிறுவனம் ஆகியவற்றை வெற்றிகரமாக இயக்குவதன் அடிப்படையில் கல்வி குழும பொருளாளரர் ராஜராஜனுக்கு, 'ஜென் எக்ஸ் இளம் தொழில் முனைவோர்' விருதை, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.கல்வியில் சிறந்து விளங்குவதற்கான தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஐ.சி.டி., அகாடமி யின் ஒத்துழைப்பு மூலம் தொழில்துறை சார்ந்த திறன்களை மேம்படுத்தியதன் அங்கீகாரமாக மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, எம்.ஐ.டி., முதல்வர் மலர்க்கண் ஆகியோர் இந்த ஆண்டிற்கான சிறந்த முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.விருது பெற்றவர்களை மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன் பாராட்டினார்.