தேசிய திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
புதுச்சேரி: தேசிய திறன்மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு நிகராக சர்வதேச அளவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேசத் திறன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, மாநில அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை பேக்கரி, ஹோட்டல் ரிசப்ஷன், வெப் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி மற்றும் ரினியூவபிள் எனர்ஜி பிரிவுகளில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது.இப்போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி மாநில மாணவர்களின் பட்டியல், புதுச்சேரி திறன்மேம்பாட்டுத் கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில், நிக் ஷிதா (பேக்கரி), ஜெயபிரகாஷ் (ஹோட்டல் ரிசப்ஷன்), செல்வமுருகன் (வெப் டெக்னாலஜி), ஜீவியா (பேஷன் டெக்னாலஜி), ஹ்ரிதயேஷ் பெஹ்ல் (ரினியூவபிள் எனர்ஜி) ஆகியோர் முதலிடம் பெற்றனர்.பின்னர், மே 14ம் தேதி முதல் 20 வரை நடந்த தேசிய அளவிலான போட்டியில் அகில இந்திய அளவில் புதுச்சேரி மாணவி நிக் ஷிதா (பேக்கரி), மாணவர் ஹ்ரிதயேஷ் பேஹ்ல் (ரினியூவபிள் எனர்ஜி) பதக்கம் பெற்றனர்.இந்த பதக்கங்களை தொழிலாளர் துறை ஆணையர் யாசம் லஷ்மிநாராயண ரெட்டி வழங்கினார். தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன், பயிற்சி பிரிவு உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.