உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுகர்வோரை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசுரம்

நுகர்வோரை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசுரம்

புதுச்சேரி : தரமற்ற தலை கவசங்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், சட்டமுறை எடை கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தரமற்ற தலை கவசங்களில் இருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கும், இணக்கமற்ற தலைக்கவசங்களை விற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை குறி வைத்து நாடு தழுவிய இயக்கத்தை இந்திய அரசாங்கத்தின் நுகர்வோர் விவகாரத்துறை துவங்கியுள்ளது. இந்திய தர நிர்ணய அமைச்சக சட்டம் 2016ன் படி, அனைத்து தலைக் கவசங்களும் தரநிலை IS 4151:2015 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சாலையோரங்களில் விற்கப்படும் பல தலைக் கவசங்களுக்கு பி.ஐ.எஸ்., சான்றிதழ் இல்லை; போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பயன்படுத்துவதும் கவனிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தலைக் கவசங்களை வாங்கும்போது பி.ஐ.எஸ்., சான்றிதழ் உள்ளதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். இது சம்மந்தமான புகார்களை bis.gov.inஎன்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் கொக்கு பார்க்கில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ