மேலும் செய்திகள்
சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
24-Mar-2025
புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சார்பில், இணையவழி மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.நிகழ்ச்சியை, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா துவக்கி வைத்தார். எஸ்.பி., பாஸ்கரன் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் இணைய வழி காவல் நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அதில் இணைய வழி மோசடிக்காரர்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பணத்தை இழக்கின்ற டிஜிட்டல் அரெஸ்ட், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, போலி பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், கிரெடிட் கார்டு மோசடிகள், ஈஸி லோன் ஆப், சம்பந்தமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
24-Mar-2025